பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை
மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து, இவர் தொடர்ந்து இரண்டாவது முறை மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.
இந்நிலையில் வெற்றியை தொடர்ந்து வரும் 30 தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.இதனிடையே தனது தாயாரிடம் ஆசி பெற குஜராத் சென்றுள்ள மோடி அகமதாபாத் விமான நிலையம் அருகே அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
அவருடன் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோரும் படேல் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.