வரும் 30 ம் தேதி பிரதமராக  பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி.

Default Image

குடியரசு தலைவர் பிரதமராக பதவி ஏற்க அழைப்புவிடுத்த நிலையில் வரும் 30ம் தேதி இரவு 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் வைத்து பிரதமாராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி.பாஜக மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து 2 முறையாக பதவி ஏற்கிறார் பிரதமர் மோடி.இதற்க்கான தகவலை வெளிட்டுள்ளது ஜனாதிபதி மாளிகை.

இதில் வெளிநாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.அண்டை நாடான இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் இந்திய பிரபலங்கள் பல தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் .தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக  நரேந்திர மோடி நேற்று  ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார் .

நாட்டின் பிரதமாராக நரேந்திர மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த .நரேந்திர மோடி தலைமையில் புதிய அமைச்சரவையும் பதவி ஏற்க உள்ளது இந்த அமைச்சரவையில் பல புதுமுகங்கள் இடபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்