சுட்டுக்கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை இறுதி ஊர்வலத்தில் சுமந்து சென்ற ஸ்மிருதி இரானி
சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் உடலை சுமந்து சென்றார் ஸ்மிருதி இரானி.
மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றார். ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுரேந்திரசிங் என்பவர் அமேதியில் வீட்டிலே தூங்கி கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அமேதியில் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உதவியாளர் சுரேந்தர் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலை சுமந்து சென்றார் ஸ்மிருதி இரானி.