சிம்புவின் கல்யாணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு !
நடிகர் சிம்பு கோலிவுட் வட்டாரத்தில் லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் பல நடிகைகளுடன் காதலில் விழுந்துள்ளார்.இதையடுத்து சிம்புவின் திருமணம் பலராலும் எதிர்பார்க்க படும் ஒரு விஷயம்.
இவரின் திருமணம் குறித்த செய்தியை மிகுந்த ஆர்வத்துடன் இவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.இதையடுத்து தற்போது இவர் இவரது உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது.இவரின் திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க இருப்பதாக தகவல் பல உலாவி வருகிறது.இது குறித்து சிம்பு தற்போது அளித்த பேட்டியில், நான் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக உலாவி வரும் செய்திகள் வெறும் வதந்தி தான் என்றும் எனது திருமணம் குறித்த அறிவிப்பை நானே முறைப்படி அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.