உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளச்சாரயம் விற்பவர்களுக்கு மரணத்தண்டனை…

Default Image

உத்தரப்பிரதேசம்; கள்ளச்சாரயம் குடிப்பதால் இறப்பவர்கள், கண், உடல் உறுப்புகளை இழப்பவர்களின் எண்ணிக்கை  ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஆசம்கார்க் மாவட்டத்தில் 17 பேரும், லக்னோவில் 28 பேரும் இறந்தனர். மேலும், இட்டா, பருக்காபாத் போன்ற பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதனால்  கடந்த செப்டம்பர் மாதம் புதிய மசோதா ஒன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கள்ளச்சாரயம் குடித்ததால் மரணம் ஏற்பட்டால் விற்றவருக்கு மரணத்தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

கள்ளச்சாரயத்தினால் உடல் ஊனம் ஏற்பட்டால் விற்றவருக்கு 10 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை அபராதம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. டெல்லி மற்றும்  குஜராத்திற்கு பிறகு கள்ளச்சாரயம் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் நடைமுறைப்படுத்த உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது…

sources;dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
sarathkumar
Thirukarthigai (1)
ipl 2025 yuvraj singh
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date