300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு “0” மட்டும் தானா! எங்கே சென்றது வாக்குகள் ?
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.
இன்று தேர்தல் முடிவுக்கு பின்னர் அமமுகவின் பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்தோம்.ஆனால் மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம். 300 வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு பூஜ்ஜிய வாக்குகளே பதிவாகி உள்ளன. இதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில் கூற வேண்டும். எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? என்று தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கூடுதல் வாக்குகள் பெற்றுள்ளது என்ற கேள்விக்கு அவர் கூறுகையில்,தேர்தலுக்கு தேர்தல் மக்களின் மனநிலை மாறும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 10 பேர் அமமுகவை விட்டு செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. சசிகலாவை வரும் 28ம் தேதி சந்திக்க உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.