விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசு தலைவரிடம் வழங்கப்படும்-நரேந்திர மோடி
இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
இதற்காக இன்று மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி .குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பின் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், அனைத்து மாநில வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும்.
ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த குடியரசு தலைவருக்கு நன்றி. விரைவில் புதிய அமைச்சர்களின் பட்டியல் குடியரசு தலைவரிடம் வழங்கப்படும். புதிய அரசு பல்வேறு நலத்திட்டங்களை விரைவில் செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.