ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி

Default Image

இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.

இதற்காக இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது மத்தியில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி .குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கடிதம் வழங்கினார் பாஜக தலைவர் அமித் ஷா. கூட்டணி கட்சி தலைவர்களுடன் குடியரசு தலைவரை அமித் ஷா சந்தித்தார். வரும் 30ம் தேதி 2வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்