இனி WhatsAPP செயலியில் விளம்பரம் செய்யலாம் Facebook அதிரடி அறிவிப்பு
பேஸ்புக் நிறுவனம் தனது இனி வாட்ஸ் ஆப் செயலியில் விளம்பரங்களை வழங்க உள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த தகவல்கள் எல்லாம் ஏற்கனவே வந்த வண்ணம் இருந்த நிலையில் இதற்கான அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி 2020 ஆம் ஆண்டு முதல் இந்த வசதி வர உள்ளதாக பேஸ்புக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நெதர்லாந்தில் நடைபெற்ற பேஸ்புக் வருடாந்திர விளம்பர கூட்டத்தில் இந்த முடிவிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும் வாட்ஸ் ஆப்பில் எங்கு எல்லாம் விளம்பரங்கள் தோன்றும் என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலின் படி பேஸ்புக் வாடிக்கையாளர்கள் விளம்ரங்களை வாட்ஸ் ஆப்பிள் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது.இதனால் இதன் அம்சத்தை வாட்ஸ் ஆப்பில் பரிமாற்றம் செய்யப்படும் விளம்பரங்கள் என்பது எங்களின் முதல் திட்டம் என்று கூறியுள்ளது.
மேலும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோகாரில் விளம்பரங்கள் தோன்றுவதை போன்று வாட்ஸ் ஆப் ஸ்ட்டர்ஸ் பகுதியில் விளம்பரங்களை தோன்ற செய்வது ஆகும்.இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு நடைமுறைபடுத்த பேஸ்புக் ஆர்வம் காட்டி வருகிறது.
மேலும் விளம்பரங்களை வழங்கும் செயலியாகவும் மட்டுமல்லாமல் தகவல்பரிமாற்றம் செய்யும் தளமாக வாட்ஸ் ஆப் இருக்க வேண்டும் என்று பேஸ்புக் விரும்புகிறது என்று தெரிவித்து உள்ளது.