இலங்கையில் இயல்புநிலை திரும்பியது! வெளிநாட்டினர் அச்சமின்றி நாட்டிற்கு வரலாம் : ரணில் விக்கிரமசிங்கே
கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த தாக்குதலில் பல வெளி நாட்டவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கை அமைதி நிலைக்கு திரும்பியில்லதாகவும், பாதுகாப்பான சூழல் நிலவுவதாகவும் கூறியுள்ளார். மேலும், உலகநாடுகள் தங்களது நாட்டு குடிமக்களை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.