பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் பங்கேற்பு
இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.இதனால் வருகின்ற 30 -ஆம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.
இந்நிலையில் மே 28,29,30 ஆகிய தேதிகளில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் டெல்லி பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ஆம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் பங்கேற்கின்றனர் .