வரலாற்றில் இன்று – டிசம்பர் 23 மே.வங்கத்தில் விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தை நிறுவினார் மகாகவி ரவீந்திரநாத் தாகூர்…!
வரலாற்றில் இன்று – டிசம்பர் 23, 1921 – புகழ்பெற்ற விஸ்வ பாரதி பல்கலைக் கழகம் மேற்கு வங்கத்தில் சாந்திநிகேதனில் கவி ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக் கழக மரபுப்படி இந்திய பிரதமரே இதன் துணை வேந்தராக இருப்பார். நோபல் பரிசு பெற்ற போருளாதார நிபுணர் அமர்த்யா சென், முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி, புகழ்பெற்ற வங்காள திரைப்பட இயக்குனர் – பாரத் ரத்னா – சத்யஜித் ரே முதலானோர் இப்பல்கலைக் கழகத்தில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.