என் வாழ்க்கையின் கொடூரமான பகுதியை அன்று இரவு தான் பார்த்தேன் என்று கூறி கண்கலங்கிய பிரபல நடிகை சுதா சந்திரன் !
நடிகை சுதா சந்திரன் தெலுங்கு சினிமாவில் “மயுரி” எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இவர் கோலிவுட் சினிமாவில் “சாமி 2” படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.இவர் பல சீரியல் தொடர்களில் மிகவும் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.
இதையடுத்து இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், அவருக்கு சிறிய வயதில் ஏற்பட்ட கார் விபத்து பற்றி பேசியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நாங்கள் வந்த காரை ஓட்டி வந்த டிரைவர் எனது மடியில் சிதைந்து கிடந்தார். என்னுடைய வாழ்க்கையில் அன்று தான் ஒரு அசிங்கமான பகுதியை பார்த்தேன் என்று கூறியுள்ளார். மேலும் என்னுடைய பெற்றோர்கள் என்னை பாதுகாத்து வளர்த்தார்கள்.ஆனால் அன்று இரவு நான் இது தான் வாழ்க்கை என்பதை காட்டி விட்டது என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.