மக்களவை தேர்தல் : திமுக வேட்பாளர்கள் வெற்றி

Default Image

இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது

ஈரோடு மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் கணேசமூர்த்தி 2 லட்சத்து 10 ஆயிரத்து 618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.செல்லக்குமார் 1,55,878 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தென்சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 2,61,088 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.

விழுப்புரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் ரவிக்குமார் 1,25,432 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் 5,95,845 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் 64,424 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்