வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி! தொண்டர்கள் சூழ ஸ்டாலின் பரப்புரை!
தமிழகத்தில் மக்களவை தேர்தலும், 22 சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று முடிவடைந்து விட்டது. இந்த இரு தேர்தலில்களிலும் திமுக மாபெரும் வெற்றியை நிகழ்த்தியுள்ளது. இதனால் திமுக தொடர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனை அடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவாலயத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ‘ இரு தேர்தலிலும் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றியை தேடித்தந்த தமிழ் பெருங்குடி மக்களுக்கு நன்றி. இந்த வெற்றிக்கு உழைத்த தொண்டர்கள், மதச்சார்பற்ற தலைவர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
தேர்தலுக்கு முன்னரே வெற்றிக்கான சூளுரை எடுத்துக்கொண்டோம். இந்த வெற்றியை காண கலைஞர் இல்லை என்பதுதான் வருத்தம். சட்டமன்ற தொகுதிகளில் சில தொகுதிகளிலும் இழுபறி நீடித்து வருகின்றன. சதி வேலை செய்து வெற்றியடைய முயற்சி செய்வார்கள் நாம் அத்தனையும் முறியடித்து வெற்றி பெற வேண்டும். என கூறினார்.
DINASUVADU