பிரதமர் மோடியை விட ராகுல் காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!
மக்களவை தேர்தல் முடிவுகள் முன்னிலை நிலவரம் தாண்டி, வெற்றியை நோக்கி விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. பாஜக ஆட்சி இன்னும் 5 ஆண்டுகளுக்கு என்பது ஏறக்குறைய முடிவு ஆகிவிட்டது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட கேரளா வயநாடு தொகுதியில் சுமார் 12 லட்சம் வாக்குகள் பெற்று அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி உத்திர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் 5.8 லட்சம் வாக்குகள் பெற்று 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ராகுல்காந்தி உத்திர பிரதேசம் மாநிலம் அமேதியில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிரிதி ராணி 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று உள்ளார்.
DINASUVADU