ஆந்திரவின் முதல்வராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி..!பதவியேற்பு தேதி அறிவிப்பு
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதனையடுத்து ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 இடங்களை பெற்று முன்னிலையில் உள்ளது.ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 25 இடங்களையே பிடித்துள்ளது.
இந்நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி மே 30-ம் தேதி ஆந்திர முதல்வராகப் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.