சென்னையில் தொடர் வழிபறியில் ஈடுபட்டவர்களை போலீஸ் கைது செய்தது.
சென்னை; அம்பத்தூர் மற்றும் கொரட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கருக்கு பகுதியில் வாகனத் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்களை போலீசார் மடக்கி விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் இவர்கள் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததால் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 சவரன் நகை, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் மூன்று பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்…
sources; dinasuvadu.com