வெற்றிவேல் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
ஜெயலலிதா சிகிச்சை பெரும் வீடியோவினை வெற்றிவேல் அண்மையில் வெளியிட்டதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் முன்ஜாமின் கோரி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, “தேர்தல் நோக்கத்திற்காக வீடியோவை வெளியிடவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, பல்வேறு தரப்பினரால் பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதாலேயே அந்த விடீயோவினை வெளியிட்டேன்” என்று கூறியுள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தாம் வீடியோவை வெளியிடவில்லை என்றும், தமது செயல் தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ் வராது என்றும், முன்ஜாமீன் மனுவில் வெற்றிவேல் கூறியுள்ளார். தமக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் விதிக்கும் எந்த நிபந்தனைகளுக்கும் தாம் கட்டுப்பட தயார் என்றும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.