பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கைது!
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானோருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதனையடுத்து, தூத்துக்குடியில் முக்கிய பகுதிகளில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார், இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்ட போது, முன்னெச்சரிக்கை நடடிக்கையாக நாகர்கோவிலில் வைத்து, இவர் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.