நல்லாட்சி உருவானால், அது அரசு நிர்வாகங்களில் தலையிடாது : திமுக எம்.பி.கனிமொழி
சென்னையில், திமுக எம்.பி.கனிமொழி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நல்லாட்சி உருவானால், அது அரசு நிர்வாகங்களில் தலையிடாது என தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில்லை. மேலும், எட்டுவழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசு அவர்களது உணர்வுகளை மதிக்காமல், அவர்களது நியாயமான வாதங்களை மதிக்காமல் நடந்துகொள்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.