தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு, பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி!
கடந்த வருடம் மே-22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, இந்த போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியானார்கள்.
இன்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் உருவ படங்களுக்கு மக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி புனித தோமையார் ஆலயத்தின் முன்பு அப்பகுதி மக்கள் பலியானவர்களின் உருவப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.