காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று விட வேண்டும்- அதிமுக தலைமை வேண்டுகோள்
நாளை தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அதிமுக தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,வாக்கு எண்ணிக்கை தினத்தன்று முகவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கே வாக்கு எண்ணும் மையங்களுக்கு சென்று விட வேண்டும்.வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.