சிறந்த அணிக்கு கேப்டன் கபில்..தோள் கொடுக்க டோனி..! பட்டியலில் விரட்டி அடிக்கப்பட்ட விராட்

Default Image

இந்தியாவின் சிறந்த ஒருநாள் அணியின் கேப்டனாக கபில் தேவ் மற்றும் அணியின் துணை கேப்டனாக டோனி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியானது இரண்டு முறை உலகக்கோப்பையை தன் கையில் எந்தியுள்ளது. அந்த தருணத்தை 1983 ஆம் ஆண்டு கபில் தேவ் பெற்று தந்தார்.2003 ஆண்டில்  கங்குலி தலைமையிலான அணி 2 வது இடத்தை பிடித்தது.

அதற்கு பிறகு கிட்டத்தட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 25 ஆண்டு  கனவை  2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் ஆட்டத்தையே மாற்றி கோப்பையை தோனி கொடுத்ததை  யாராலும் மறக்க முடியாது.மேலும் இந்தியா 1987, 1996, 2015 ஆண்டுகளில் இந்திய அரையிறுதியில் தோல்வியை தழுவியது.

Image result for kapil dev and dhoni

அன்று தெருவில் ஒன்று கூடி பட்டாசு வெடித்து கத்தி ,அழுது என்று தங்களது உணர்வுகளை வெளிபடுத்திய நினைவுகள் எல்லாம் முகம் முன் வந்து போகும் ரசிகர்களுக்கு கனவு நிறைவேறிய நாள்

இந்த வருடம் கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய அணி  3 வது முறையாக கோப்பையை வெல்லுமா.? பட்டத்தை வெல்லுமா ..? என்று ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.

Related image

இந்த நிலையில் அனைத்து உலககோப்பை போட்டியில் விளையாடிய இந்திய  அணியை வைத்து ஆல்டைம் பெஸ்ட் லெவன்  என்ற ஆங்கில பத்திரிக்கை ஒன்று  சிறந்த அணியை  வெளியிட்டுள்ளது.

Related image

அதில்  ஆல்டைம் உலக அணிக்கு கபில் தேவ் கேப்டனாக உள்ளார்.துணை கேப்டனாக  தோனி இவர்களுடன் 11 பேர் கொண்ட அணியை வெளியிட்டது. இதில் இந்திய  அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயர் இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில்  சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கில பத்திரிக்கை ஆல்டைம் வெளியிட்டுள்ள அணிக்கு ரசிகர்ளாகிய உங்கள் கருத்து என்ன..?

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்