குஜராத் முதல்வர் யாரென அருண் ஜெட்லி அறிவித்தார்
குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு 99 இடங்கள் மட்டுமே கைப்பற்றினாலும், ஆட்சியை தக்கவைத்துள்ளது. தற்போது ஆட்சியமைக்க முதல்வரை தேர்ந்தெடுத்து விட்டது.
தற்போதைய குஜராத் முதல்வர் விஜய் ரூபானியே மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் நிதின் பட்டேல் துணை முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 99 எம்எல்ஏகளுடன் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் இந்த அறிவிப்பை அருண் ஜெட்லி வெளியிட்டார்.