வில்லியம் ஜெட் நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் கார் சோதனை வெற்றி!
ஜெர்மனி மியூனிக் நகரில் இயங்கும் வில்லியம் ஜெட் நிறுவனம், 5 பேர் அமரும் வசதி கொண்ட பறக்கும் காரை வடிவமைத்துள்ளது. இந்த கார் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் இயங்கும். மேலும், இது இருக்கும் இடத்தில் இருந்தே மேலெழும்பும் வகையில் சோதனை செய்யப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவேறியதையடுத்து, சிறிய குடியிருப்புகளின் மேல் மாடியில் இந்த காரினை இறக்க முடியும் என வில்லியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.