மத்தியில் பாஜகவுக்கு இடங்கள் கூடுமே தவிர, குறையாது – தமிழிசை
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெரும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி மக்களவை தேர்தல் 7-கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.இதன் பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.
கருத்து கணிப்பு தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கருத்துக்கணிப்புகளை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்ததே திமுக தான் .கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள்.மத்தியில் பாஜகவுக்கு இடங்கள் கூடுமே தவிர, குறையாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.