தொடர்ந்து மரங்களை நடவில்லையென்றால், தென் ஆப்பிரிக்காவின் நிலை தான் தமிழகத்திற்கு ஏற்படும் : நடிகர் விவேக்
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் திண்டுக்கல்லில் உள்ள செயின்ட் பீட்டர் பள்ளியில், மதுரை அமெரிக்கா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதன் பின் அந்த பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நாட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தொடர்ந்து மரங்களை நாடவில்லை என்றால், தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் போல, தமிழகத்திலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.