ஒரு செருப்பு வந்துவிட்டது! இன்னொரு செருப்பிற்காக காத்திருக்கிறேன் : கமலஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் மீது அரசியல் தலைவர்கள் பலரும் குற்றம் சாட்டிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில், நடிகர் கமலஹாசன் ஒத்த செருப்பு படவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
அப்போது பேசிய அவர், ” ஒரு செருப்பு வந்துவிட்டது, இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் என்றும், வாழ்த்துக்கள் வளர்க்கும் அளவுக்கு, தன்னம்பிக்கை நம்மை வளர்க்காது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என் மீது செருப்பு வீசியவருக்கு தான் அவமானமே தவிர, எனக்கு அல்ல என தன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தையும், காந்தியின் வரலாற்று நிகழ்வையும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.