தளபதி 64 படம் குறித்த மாஸ் அப்டேட் !
தளபதி விஜய் தற்போது மிகவும் விறு விறுப்பாக “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார்.தற்போது இந்த படம் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இந்த படத்தை அடுத்து விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்று பல தகவல்களும் வெளியான நிலையில் தற்போது இந்த படத்திற்கு பிறகு விஜயின் 64 படத்தை அவரது உறவினர் பிரிட்டோ என்பவர் தயாரிக்க இருக்கிறாராம்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் இயக்குகிறார்.இந்த படத்தில் விஜய் கேங்ஸ்டராக களமிறங்க இருக்கிறாராம். இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.