வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெட்டு வைத்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற வங்கதேசம்

Default Image

மூன்று நாடுகள் பங்கேற்று விளையாடிய போட்டியில் வங்கதேச அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

Image result for bangladesh vs wi

அயர்லாந்து , வெஸ்ட் இண்டீஸ் ,வங்காள தேச உள்ளிட்ட மூன்று நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடியது.போட்டியை அயர்லாந்து இந்த போட்டியை நடத்தியது.மேலும் அந்நாட்டில் தான் நடந்தது.

Related image

இதில் லீக் சுற்றுடன் போட்டியை நடத்திய அயர்லாந்து அணி வெளியேறியது.நேற்று முன்தினம் டப்லினில் இறுதிப்போட்டியானது  நடைபெற்றது.இந்த இதில் வெஸ்ட் இண்டீஸ் -வங்காளதேச அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

போட்டிக்கு இடையே மழை குறிக்கிட்டதால் போட்டியானது 24 ஓவர்களாக குறைக்கப்பட்டது.இதில் முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 24 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது.

Image result for bangladesh vs wi

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷாய் ஹோப் 74 ரன்கள்  எடுத்து ஆட்டம் இழந்த நிலையில் சுனில் அம்ரிஸ் 69 ரன்னுடனும் , டேரன் பிராவோ 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட  24 ஓவர்களில் 210 ரன்களை 22.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில்  வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டியது.பல்வேறு நாடுகள் இடையே வென்று அதுவும் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

மேலும் இந்த தொடரில் வெஸ்ட்இண்டீஸ் அணியானது  வங்காளதேசத்துக்கு எதிரான 3 ஆட்டங்களிலும் தோல்வியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்