சப்ஜா விதையில் உள்ள சாதுரியமான மருத்துவ குணங்கள்!
நாம் நம் அன்றாட வாழ்வில் பல வகையான மருத்துவ குணங்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதுண்டு. பழங்கள் மற்றும் காய்கறிகள் அனைத்துமே நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பல நோய்களையும் குணப்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில், சப்ஜா விதையில் உள்ள மருத்துவகுணங்கள் பற்றி பார்ப்போம்.
சர்க்கரை நோய்
இன்று அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.
மலசிக்கல்
மலசிக்கல் பிரச்னை உள்ளவர்கள், சப்ஜா விதையை பாலில் ஊற வைத்து குடித்து வந்தால், மலசிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.
வயிற்று பிரச்சனைகள்
வயிற்று பிரச்னை உள்ளவர்களுக்கு, இந்த விதை ஒரு சிறந்த மருந்தாகும். வயிற்று சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள், சப்ஜா விதையை ஊற வைத்து, அதனுள் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால், வயிற்று பிரச்சனைகள் தீர்ந்து விடும்.