தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம்-மத்திய அரசு எச்சரிக்கை
6 மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படலாம் .அணைகளில் உள்ள நீரின் அளவு குறைந்துவிட்டதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.