நெட்டில் வெளியான ஜியோமியின் நியூ Redmi7A வகை ஸ்மார்ட்போன்
ஜியோமி நிறுவனத்தின் அடுத்த படைப்பாக இந்தியாவில் வெளிவர இருக்கும் Redmi 7A ஸ்மார்ட்போன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
மார்ச் மாதத்தில் Redmi 7 இந்த வகை போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இதன் பின் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது அறிந்ததே ஆனால் தற்போது ஜியோமியின் புதிய வகை மாடலான Redmi 7A போன்கள் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் அதன் தகவல்கள் முழுவதும் இணையத்தில் வெளியாகி ஜியோமி நிறுவனத்திற்கு அதிர்ச்சி அளித்ததுள்ளது.
மேலும் இந்த தகவல்கள் எல்லாம் சீன வலைதளங்களில் வெளிவாகி உள்ளது. ஏற்கனவே இவை பற்றிய தகவல்கள் எல்லாம்இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் சீன வளையதலமான TENAA என்ற இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த வகை போன்கள் M1903C3EE / M1903C3EC என்ற மாடல் நம்பர்களில் சான்று பெற்று Redmi 7A என்ற பெயரில் வெளிவர வாய்ப்புள்ள நிலையில் தான் இவை பற்றிய தகவல்கள் லீக் ஆகியுள்ளது.
இந்த போனில் 5.4 இன்ச் ஹெச்.டி. 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர்,பிளஸ் 18:9 டிஸ்ப்ளே, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.
மேலும் இவற்றின் சிறப்புகள் :5.45 இன்ச் 1440×720 பிக்சல் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே,4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி,2 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி மற்றும் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி