அதிமுக ஆட்சி என்று முடிவு வருகிறதோ அன்று தான் ரஜினி அரசியலுக்கு வருவார் – தமிழருவி மணியன்
அதிமுக ஆட்சி என்று முடிவு வருகிறதோ அன்று தான் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எழு கட்டமாக நடந்து வரும் தேர்தலுக்கு வருகிற மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியிடப்படும்.
மேலும் நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி சூலூர்,ஓட்டப்பிடாரம்,அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
தற்போது ரஜினிகாந்த் அரசியல்தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,அதிமுக ஆட்சி என்று முடிவு வருகிறதோ அன்று தான் ரஜினி அரசியலுக்கு வருவார் . திமுக – அதிமுக கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டுமென்றால் ரஜினி அரசியலுக்கே வரமாட்டார் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.