சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் களமிறங்கும் பிரபல பாடகர் !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
இதனையடுத்து, தர்பார் படத்தின் அறிமுக பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இவர் பேட்ட படத்தில் அறிமுக பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.