தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும்- பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

Default Image

5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ளது.இன்றுடன் 7 -ஆம் கட்ட தேர்தலின் பரப்புரை முடிவடைகிறது.வருகின்ற 19-ஆம் தேதி 7 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்,நாங்கள் கடந்துவந்த பாதை எளிதானதல்ல.5 ஆண்டுகளில் பல தடைகளை தாண்டியுள்ளேன்.

பண்டிகை மற்றும் கிரிக்கெட் போல தேர்தலும் திருவிழாவை போல நடக்கிறது.அறுதி பெரும்பான்மையுடன் தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும்.

5 வருடம் ஒத்துழைத்த மக்களுக்கு நன்றி, உங்களின் ஆசீர்வாதங்கள் எங்களுக்கு தேவை . நாங்கள் மீண்டும் வரலாறு படைப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்