ஐயோ பாவம்! ராஜா ராணி சீரியலில் நடித்த சஞ்சீவுக்கு இப்படி ஒரு நோய் உள்ளதா?
சஞ்சீவ் மற்றும் அலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் படப்பிடிப்புக்காக சென்றுள்ள சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் ஒரு பேட்டி அளித்துள்ளனர். அந்த பேட்டியில், சஞ்சீவ் பேசுகையில், எனக்கு சிறுவயதில் இருந்தே ஒரு நோய் உள்ளது. அந்த நோயின் பெயர், ஆல்டோஃபோபியா. இது என்ன நோய் என்றால், உயரத்தை கண்டு பயப்படுவது என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, ராஜா ராணி சீரியலில் படப்பிடிப்பின் போது, உயரமான காட்சிகளில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது, தனக்கு உள்ள நோய் குறித்து இயக்குனரிடம் கூறியுள்ளார். அதை கேட்ட இயக்குனர், இதையெல்லாம் சரி செய்து விட்டல்லவா நீங்கள் நடிக்க வந்திருக்க வேண்டும் என்று திட்டியுள்ளார்.
இதுகுறித்து சஞ்சீவ் கூறுகையில், இந்த நோயால் நான் பட்ட முதல் அவமான இது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.