பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதை மன்னிக்க முடியாது -பிரதமர் மோடி
கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது கூறிய கருத்து ஓன்று சர்ச்சையாக மாறியது. நாடு முழுவதும் இதற்கு ஆதரவாகவும் , எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில்,நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று தெரிவித்தார்.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.பின்னர் மன்னிப்பு கோரினார்.
குறிப்பாக பாஜகாவை சேர்ந்தவர்களே பிரக்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவறான கருத்து என்றும் பதிவு செய்தனர்.
தற்போது பிரக்யாசிங் கருத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்,நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்’ என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் கூறியதை மன்னிக்க முடியாது என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.