வரம்பு மீறியதா வாட்சாப்?! குற்றச்சாட்டுக்கு என்ன பதிலளிக்கப் போகிறது?
வாட்சாப் குரூப்பில் ஒரு செய்தியை ஐந்து பயனர்களுக்கு மட்டுமே அனுப்ப இயலும். ஆனால் நடந்தது கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலுக்காக ஒரே நேரத்தில் தேர்தல் பரப்புரைக்காக ஆயிரம் பேருக்கு தகவல் பரப்பப்பட்டுள்ளது. இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு வாட்ஸப் நிறுவனம் என்ன பதில் கூறப் போகிறது என்று தெரியவில்லை.
வாட்சாப் செயலியின் மூலம் 5 பேருக்கு மட்டுமே ஒரு செய்தியை பார்வேர்ட் செய்ய இயலும். ஆனால், இணையத்தில் கிடைக்கும் ஜிபி வாட்ஸ்அப் ஜிபி வாட்ஸ்அப் போன்ற மென்பொருட்கள் மூலம் ஆயிரம் பேருக்கு தகவல் அனுப்பி வைத்துள்ளனர்.
ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் பிசினஸ் சென்டர் என்ற மென்பொருள் வழியே வாட்சாப் விதிமுறைகளை மீறி ஆயிரம் பேருக்கு ஒரே நேரத்தில் செய்தி அனுப்பப்பட்டதாக ட்ராய்ட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
DINASUVADU