கைதுக்கு நான் பயப்படவில்லை கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும்-கமல்

Default Image

அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்க்கொண்ட கமல் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்ஸே என்று  கூறினார் .இது பலத்த சர்ச்சையை கிளப்பியதோடு பல எதிர்ப்புகளும் ஆதரவும் கிளம்பியது.

இதனிடையே நேற்று அரவக்குறிச்சி தொகுதியில் அவர் பேசிவிட்டு கீழிறங்கும் போது காலணி வீசப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக பாஜகாவை சார்ந்த  சிலர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், தனது நிலைப்பாட்டில் இருந்து மாறாமல் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்றும் ,இதை நான் ஏற்கனவே மெரினாவில் பேசியுள்ளேன்.இது உருவான சர்ச்சையில்லை உருவாக்கப்பட்ட சர்ச்சை,பிரதமர் மோடிக்கு பதில் கூறவேண்டியதில்லை .சரித்திரம் பதில் சொல்லும்.நான் கைதுக்கு பயப்படவில்லை, கைது செய்தால் பதற்றம் அதிகரிக்கும். அது என்னுடைய வேண்டுகோள் இல்லை அது என்னுடைய அறிவுரை என்று தெரிவித்தார்.

மேலும் நாதுராம் கோட்ஸே குறித்த கருத்து தொடர்பாக சூலூரில் இன்று கமல் பிரச்சாரம் மேற்க்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது .இதற்கு பதிலளித்த கமல் பரப்புரை மேற்க்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதில் அரசியல் உள்ளது. அப்படி பதற்றமான சூழல் இருந்தால் சூலூரில் ஏன் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்