ரிஷப் பந்த் வேண்டாம் கார்த்திக் ஓகே…!காரணம் என்ன ..???கோலி ஓபன் டாக்
12 வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் 30 தேதி முதல் ஜீலை 14 தேதி வரை நடைபெறுகிறது.இதில் இந்திய அணி பங்கு கொண்டு விளையாட உள்ளது.
சமீபத்தில் உலககோப்பையில் பங்குகொண்டு விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.இதில் தேர்வுகுழு மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கெட் கீப்பர் டோனி மீதும் கடும் விமர்சனம் எழுந்தது.
அந்த விமர்சனம் எல்லாம் இந்திய அணியில் ரிசப் பந்த் சேர்க்கப்படவில்லை.அதற்கு பதிலாக திணேஷ் கார்த்திக்கிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தான்.மேலும் திணேஷ் கார்த்திக்கை தேர்ந்தெடுத்தது தவறு என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக விளக்கமளித்த தேர்வுக்குழு திணேஷ் கார்த்திக் அவருடைய அனுபவத்தை வைத்தே தேர்ந்தெடுக்கப்பட்துள்ளார்.மேலும் இந்த விவகாரம் விஷ்வ ரூபம் எடுத்த நிலையில் இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் இருந்த கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார்.
ஏன் ?? திணேஷ் கார்த்திக்கை தேர்ந்தெடுத்தோம் என்றால் அவர் அவருடைய அனுபவமே முக்கிய காரணம் மற்றும் இக்கட்டான,நெருக்கடியான சூழ்நிலையிலும் பேட்டிங்கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இந்த விஷயம் தேர்வுக்குழு அனைவரும் ஒப்பு கொண்டனர்.இதனால் அவருக்கு இயல்பாகவே வாய்ப்பு கிடைத்துள்ளது.
தோனிக்கு ஒரு வேளை காயம் ஏற்பட்டு ஆட முடியாத நிலையில் திணேஷ் கார்த்தியால் கவனம் செலுத்த முடியும்.ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தக் கூடியவர்.2007 உலகக்கோப்பைக்கு பிறகு தற்போது இரண்டாவது முறையாக அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.