இனி முகநூலில் நேரலையை பதிவிட்டால் கணக்குகள் முடக்கப்படும் ! எச்சரிக்கை
இனி முகநூலில் நேரலை பதிவிட சிலகட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது அந்த நிறுவனம் .
இன்று மக்கள் தங்கள் அன்றாட பொழுதை துவங்கும் முதல் பணியை முடிக்கும் வரை தாங்கள் என்ன செய்கிறறோம் எங்கு இருக்கிறோம் என்று அனைத்து நிகழ்வுகளையும் பதிவுகளாக வெளியிடுவதில் ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர்.இதற்கு அவர்கள் சமூக வலைத்தளங்களை தங்கள் மறுஉருவமாக பார்க்கின்றனர் .இன்று உலகமுழுவதும் பயன்படுத்தப்படும் சமூகவலைத்தளங்களில் முகநூல் ,ட்விட்டர் ,வாட்ஸப் முக்கிய பங்கு வகிக்கிறது.
சமூக வலைத்தளங்களை கொண்டு பல நல்ல செயல்களும் அதற்க்கு இணையாக தீயசெயல்ககளும் நடக்கின்றது .இதற்க்கு காரணம் நாம் அதை பயன்படுத்தும் முறை அந்த நபரை பொறுத்தது.சென்னை வெள்ளம் முதல் கேரளா வெள்ளம் வரை தனது முக்கிய பங்கை வகிக்கிறது இந்த சமூக வலைத்தளங்கள்.
சமீபத்தில் நியூஸிலாந்தில் ஒரு மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது இதில் பலர் கொல்லப்பட்டனர்.இந்த துப்பாக்கி சூட்டை நேரலையில் வெளியிட்டவாரே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .இதனால் உலகமே அதிர்ந்து போனது ,இது போன்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு முகநூல் நிறுவனம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதில் முகநூல் நேரலையை தவறாக பயன்படுத்துவோர் மற்றும் பிறர்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் பதிவை பகிர்வோர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னதான் முகநூல் போன்ற சமூகவலைத்தளங்கள் இது போன்ற கட்டுப்பாடுகளை கொண்டுவந்தாலும் ,பொதுவான சமூகத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் ,பிறர் மனம் புண்படாதவாறும் ,அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எப்படி சமூகவலைத்தளங்களை பயன்படுத்தவேண்டும் என்று சுயஒழுக்கத்தோடு இருந்தால் மட்டுமே நல்லது.
தினச்சுவடு வாசகர்கள் சமூகவலைத்தளங்கள் எப்படி கொண்டு செல்லலாம் என்று உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.