கமல் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டால், நான் கூறியதை வாபஸ் பெற்று கொள்கிறேன்! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!
கமல் சில நாட்களுக்கு முன்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும், அவர் நாதுராம் கோட்சே’ எனவும் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக மற்றும் பாஜகவினர் கடுமையாக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இது குறித்து, அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில் ‘கமலின் நாக்கை அறுக்க வேண்டும்’ என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். இந்த கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில், ‘இந்துக்களை வம்பிற்கு இழுப்பது சிலருக்கு வேலையாய் போயிற்று. அதில் முக்கியமானவர் ஸ்டாலின் மற்றும் அவருடன் இருப்பவர்கள். அதிலும் வீரமணி ஒரு விளங்காதவர். பெண்களின் தாலியை அறுக்க வேண்டும் என கூறி இந்து பெண்கள் மனதை புண்படுத்தியவர்.
கமல் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டால், நான் கூறிய கருத்தினை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
DINASUVADU