தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
நாம் நமது அன்றாட வாழ்வில் பல வகையான பழங்களை சாப்பிடுவதுண்டு. அனைத்து பழங்களுமே நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக தான் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது, பல ஆரோக்கிய குறைபாடுகளையும் தீர்க்கிறது.
தற்போது இந்த பதிவில் தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடிப்பதால், என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பது பற்றி பாப்போம்.
இரத்த அழுத்தம்
திராட்சை சாற்றில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. எனவே இரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்கள், தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
இதய பிரச்னை
இதயம் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்ப்பதில், திராட்சை சாறு மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடித்து வந்தால், இரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
நோயெதிர்ப்பு ஆற்றல்
நமது உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் இல்லாத பட்சத்தில், எந்தவிதமான நோய்களும், எளிதில் நம்மை தாக்கி விடும். எனவே தினமும் சிறிதளவு திராட்சை சாறு குடித்து வந்தால், நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கிறது.
மாரடைப்பு
தினமும் திராட்சை சாறு குடித்து வந்தால், இதயத்தில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு, உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
உடல் எடை
திராட்சை சாற்றை, உடற்பயிற்சி செய்த பின் குடித்து வந்தால், உடலில் உள்ள கலோரிகளை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.