5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவர் செந்தில் பாலாஜி – முதலமைச்சர் பழனிச்சாமி
5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவர் செந்தில் பாலாஜி என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார் .
அரவக்குறிச்சி தொகுதி வெஞ்சமாங்கூடலூரில் முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார் .அப்போது அவர் பேசுகையில்,அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள் தூர் வாரப்பட்டு, நிலையாக தண்ணீர் கிடைக்க செய்வோம். இப்பகுதியில் உயர்மட்ட பாலம் மற்றும் முருங்கைக் காய் குளிர்ப்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதி அளித்துள்ளார் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார் .