அடுத்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இரு நாயகிகளா?
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இந்த படத்தை அடுத்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் ஓர் படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது.
இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளார் என்ற செய்து பரவி வருகிறது. இது பற்றி விசாரிக்கையில் இன்னும் பேச்சுவார்த்தை நிலையில் தான் உள்ளது என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம்சூர்யாவுக்கு ஜோடியாக தான் டூயட் பாடி ஆடவிருப்பதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங்கே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். தற்போது, சாய் பல்லவி குறித்த செய்தி பரவி வருவதால், இப்படத்தில் அவருக்கு இரண்டு ஹீரோயின்களாக இருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.என்ன இருந்தாலும் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் தான் உண்மையாகும்.
source: dinasuvadu.com