பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப நீங்க இதை கண்டிப்பா படிங்க!
இன்றைய நவீனமாயமான உலகில் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே, நவீனமயமாக மாறியுள்ளது. இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே முடி சம்பந்தமான பிரச்சனைகள் தான். அதில் பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்கள் தான் அதிகம்.
இந்நிலையில், நாம் தலைக்கு தேய்க்க பயன்படுத்தும் ஷாம்புகள் பல வகையான கெமிக்கல் கலந்துள்ளதாக உள்ளது. இதனால் நாம் நம் தலைகளில் தேய்க்கும்போது, பல வகையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
செய்முறை : 1
தேவையானவை
- ஆப்பிள் சிடர் வினிகர் – 4 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
- பஞ்சு
செய்முறை
ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து, பிஞ்சை பஞ்சை வைத்து உச்சந் தலையில் இருந்து தடவ வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால், பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை பெறலாம்.
செய்முறை : 2
தேவையானவை
- கற்றாலை ஜெல் – 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
செய்முறை
கற்றாலை ஜெல் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் பூசி நன்கு மசாஜ் செய்து, 15 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் குளித்தால் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
செய்முறை : 3
தேவையானவை
- நெல்லிக்காய் சாறு – 2 மேசைக்கரண்டி
- எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
செய்முறை
எலுமிச்சை சாறு மற்றும் நெல்லிச்சாறை கலந்து, உச்சந் தலையில் இருந்து தேய்த்து, 30 நிமிடங்கள் ஊற வைத்து, பின் தலைக்கு குளிக்க வேண்டும். தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு இவ்வாறு செய்து வந்தால், பொடுகு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம்.