மக்களவை தேர்தல் 2019 : நாளை 6 -ஆம் கட்ட தேர்தல்
நாளை (மே 12 ம் தேதி) 6 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.இதில் 5 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.நாளை (மே 12 ம் தேதி) மொத்தம் 59 தொகுதிகளுக்கு 6 -ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரபிரதேசம் 14 தொகுதிகள்,அரியானா 10 தொகுதிகள், மேற்குவங்கம், பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கான பரப்புரையும் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இதனால் தேர்தல் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.