7 பேர் விடுதலை : தமிழக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் -பாஜக எம்.பி இல.கணேசன்
7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.பி இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்ற மனுவை உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்தது.மேலும் வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தது.
இது தொடர்பாக பாஜக எம்.பி இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,7 பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பை அளித்துவிட்டதால், தமிழக ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.